தமிழக, கர்நாடக காவிரி பகுதிகளில் தொடரும் கனமழை.! 2-ம் நாளாக ஒகேனக்கலுக்கு 30,000 கன அடி நீர் வரத்து

0 3558

தருமபுரி அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. தமிழக காவிரி கரையோரங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.

இந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து வருவதால் பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கலில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி மற்றும் ஆற்று பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே விதித்த தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments