உறவினரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு ஓடையில் இறங்கிய நபர், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்பு

0 7240

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உடன் வந்தவர்களின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் ஓடையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் இறங்கிக் கடக்க முயன்ற நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டவரின் சடலம் நீண்ட தேடலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.  

மதுரை மாவட்டம் முழுவதுமே கடந்த 3 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால், ஓடைகள், வாய்க்கால்களில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டு ஓடுகிறது. இந்த நிலையில் அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த இராஜசேகர் என்ற ஜேசிபி ஓட்டுநர், சனிக்கிழமை மாலை வாழைத்தோப்பு அருகேயுள்ள காட்டில் வேலை செய்துவிட்டு தனது சகாக்களுடன் வீடு திரும்பியுள்ளார்.

வழியில் குறுக்கிட்ட ஓடையில் வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாய்ந்து கொண்டிருந்தது. உடன் சென்றவர்கள் ஓடைக்குள் இறங்க பயந்து தயங்கி நிற்க, ராஜசேகர் அலட்சியமாக ஓடைக்குள் இறங்கினார். உடன் சென்ற அவரது உறவினர் எச்சரித்த போதும் அசட்டு துணிச்சலிl இறங்கிய இராஜசேகரை தண்ணீர் இழுத்துச் சென்றது.

நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத இராஜசேகர் மாயமான நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது சடலம் மட்டுமே மீட்கப்பட்டது. பருவமழை தீவிரமடையத் தொடங்கிய நாளில் இருந்தே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் தினசரி தொடர்கதையாகி வருவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், அரசின் எச்சரிகையை அலட்சியப்படுத்துவதால் மட்டுமே இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments