மதுரை வைகை ஆற்றில் கரைபுரளும் வெள்ளம், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

0 3760

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே கனமழை நீடித்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து 66.81 அடியாக உள்ளது. ஏற்கனவே அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்காக 1100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் இருபுறமும் தற்காலிக தடுப்புகள் அமைத்து போலீசார் போக்குவரத்தை முடக்கியுள்ளனர். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments