காற்றில் கலந்துள்ள நுண்துகள்களை குறைக்க நடவடிக்கை, தண்ணீர் லாரிகளை களமிறக்கிய டெல்லி அரசு

0 2569

டெல்லியில் மாசடைந்துள்ள காற்றில் உள்ள நுண்துகள்களை தண்ணீர் பீய்ச்சி அடித்து குறைக்கும் நடவடிக்கைக்காக 114 தண்ணீர் டேங்கர் லாரிகளை டெல்லி அரசு களமிறக்கியுள்ளது.

டேங்கர் லாரிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்த டெல்லி சுற்றுச் சூழல் அமைச்சர் கோபால் ராய், தீபாவளி பண்டிகைக்கு பிறகு அதிகரித்துள்ள காற்று மாசை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

பட்டாசு வெடித்ததன் காரணமாக மட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் வைக்கோலை அதிகளவில் எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு கூடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

காற்றில் கலந்துள்ள கனமான நுண்துகள்களை குறைக்க டெல்லியின் பல இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் சுவாச பிரச்னை காரணமாக மருத்துவர்களை அணுகும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments