4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை - முதலமைச்சர்

0 8409

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார்.

சென்னையில் தொடந்து பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனை அடுத்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார்நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 50,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், உணவு வழங்கும் பணியை தொடர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை என அறிவித்த முதலமைச்சர், வெளியூர்களில் இருந்து சென்னை வர திட்டமிட்டுள்ளவர்கள் பயணத்தை ஒத்திவைக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments