சேலத்தில் நடைபெற்ற நகை திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

0 204

சேலத்தில் நடைபெற்ற நகை திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 2016ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்து 4 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் திருடப்பட்ட நகையை திரும்ப பெற்றதாக குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பின்னரும், நகையை தன்னிடம் ஒப்படைக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அவர்கள் விசாரணை செய்தால் முறையாக இருக்காது என்று தெரிவித்த நீதிபதி, வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். சிபிசிஐடி எஸ்.பி அந்தஸ்து பெற்ற அதிகாரி இந்த விசாரணை கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments