வினாடிக்கு 29,380 கன அடி நீர் வருவதால் கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை

0 9575

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருந்ததாலும், வினாடிக்கு 29 ஆயிரத்து 380 கன அடி என அதிக அளவு நீர் வருவதாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து காலை 8 மணி அளவில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக காணப்பட்டது.

நேற்றில் இருந்து இன்று வரை ஒரே நாளில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் கொள்ளளவு 87.38 டி.எம்.சியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments