செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு

0 5166

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர்  திறக்கப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மொத்தம் 21.20 அடி நீர்மட்டம் கொண்ட அந்த ஏரியில் 19.30 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளதால் நீர் திறக்கப்பட்டது.

காலையில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 1,487 கன அடி தண்ணீர் வந்த நிலையில் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனை அடுத்து ஏரிக்கான நீர் வரத்து 3,000 கன அடியாக அதிகரித்ததால் 1,500 கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாரவாரி குப்பம், தண்டல்கழனி, வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து, ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 24 அடி நீர்மட்டம் கொண்ட அந்த ஏரியில் 21.30 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளதால் நீர் திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,500 கன அடி வரும் நிலையில், வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments