திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மழை நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிட வேண்டும் - முதலமைச்சர்

0 2653

அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான மழை நிவாரணப் பணிகளை உடனே நிறைவேற்றிட திமுகவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகளில் உதவவும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களின் இன்னல்களைப் போக்கிடவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments