சென்னையில் வெள்ளம் பாதிப்பு, முதலமைச்சர் நேரில் ஆய்வு

0 3147

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வட சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக வடசென்னையில் மழைநீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெரம்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேங்கிய மழை நீரில் நடந்து சென்று நேரில் ஆய்வு செய்தார்.

முதலமைச்சருடனான ஆய்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தேங்கியுள்ள மழை நீரை விரைவாக அகற்ற அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

ஓட்டேரிப் பகுதியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னையில்  கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

தொடர் கனமழையால் பாதிப்புக்குள்ளான சென்னை வேளச்சேரி பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்த முதலமைச்சர், மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments