சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை, ராயபுரத்தில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழப்பு

0 3639

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ராஜாராம் என்பவர் உயிரழந்தார்.

ராயபுரம் ஆஞ்சநேயா நகர் 5வது தெருவைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய வீடு மிக பழைமையானது என்பதால் கனமழை காரணமாக இரவு 11.30 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜாராம் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த ராஜாராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments