பெரியபாளையம் அருகே முந்திரிக் காட்டில் தலை, கை இன்றி ஆண் சடலம்... போலீசார் விசாரணை

0 2916

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முந்திரி காட்டுப்பகுதியில் தலை, கை இன்றி ஆண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்காத்தாகுளம் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் ஆடு மேய்க்க சென்றவர்கள் துர்நாற்றத்துடன் மண்ணில் புதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் அந்த சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments