7 மாநிலங்கள், ஒன்றியப் பகுதிகளில் நவ.11 வரை கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 10449

தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வரும் 11ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில்,தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது நவம்பர் 9 ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments