மேற்கு ஆப்பிரிக்காவில் எரிபொருள் நிரப்பிய டேங்கர் லாரி வெடித்து சிதறிய விபத்தில் 99 பேர் பலி

0 3302

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் எரிபொருள் நிரப்பி வந்த லாரி வெடித்து சிதறிய விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் ப்ரீ டவுனில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. லாரியில் இருந்து சிந்திய எரிபொருளை சேகரிக்க மக்கள் திரண்ட நிலையில், திடீரென லாரி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

பயங்கர விபத்தில் 99 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றுவட்டாரத்தில் இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி உருக்குலைந்தன. மருத்துவமனையில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments