டெல்லியில் தொடர்ந்து தீங்கிழைக்கும் தீவிர நிலையில் நீடிக்கும் காற்று மாசு

0 2802

டெல்லியில் காற்று மாசு நிலவரம் தொடர்ந்து உடலுக்குத் தீங்கிழைக்கும் வகையில் மோசமான நிலையில் நீடித்து வருகிறது. 

பஞ்சாபில் விவசாயிகள் பயிர்கள் எரிப்பது தொடர்வதாலும் காற்றின் மாசு தொடர்ந்து தீவிரமான நிலையில் உள்ளது. மிதமான குளிர்க் காற்று வீசுவதால் இன்று முதல் காற்று மாசு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசு அதிகரிப்பால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவதால் மருத்துவமனைகள் நிரம்பிவருகின்றன.

மாசு காரணமாக நுரையீரல்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கொரோனா நோயாளிகளுக்குத் தீவிரமான பாதிப்பும் மரணமும் நேரிடலாம் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments