தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் இடையே 11 சிறப்பு முன்பதிவில்லாத ரயில்கள்

0 11761

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையே முன்பதிவில்லா 11 சிறப்பு பயணிகள் ரெயில்கள் குறித்த அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பழனியில் இருந்து மதுரைக்கு நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து பழனிக்கு வரும் நவம்பர் 11-ந் தேதியில் இருந்து காலை 7.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

கோவையில் இருந்து பழனிக்கு வரும் நவம்பர் 10-ந் தேதியில் இருந்து மதியம் 2.10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். பழனியில் இருந்து கோவைக்கு நவமபர் 11-ந் தேதியில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இதே போன்று விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும், திருநெல்வேலி-தூத்துக்குடி செங்கோட்டை, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கும் முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன. இடையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரயில்கள் நின்று செல்லும் என்றும் தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments