21ஆம் நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் நவ.19ல் நிகழ உள்ளது - நாசா

0 6820

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழ உள்ளது. 

சூரியன் மற்றும் நிலவுக்கு நடுவே, பூமி ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.  வரவிருக்கும் சந்திர கிரகணம், அமெரிக்கா, கனடா,  மெக்சிகோவில் உள்ளவர்களுக்கு முழுமையாகத் தெரியும். இதைக் காண பைனாகுலர்கள் தேவையில்லை. அமெரிக்க நேரப்படி அதிகாலை 2:19 மணி முதல் அதிகாலை 5:47 மணி வரை சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்திய நேரப்படி பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை காண இயலாது. சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைப்பதால், நிலவு சிகப்பு நிறத்தில் காணப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments