டி-20 உலகக்கோப்பை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

0 3742

டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது.

அபு தாபியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொல்லார்ட் அதிகப்பட்சமாக 44 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கு இந்தியத் தீவுகளின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வார்னர் 56 பந்துகளில் 89 ரன்களும், மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 53 ரன்களும் விளாச, ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments