பருவமழை முன்னெச்சரிக்கை... ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

0 3413

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 9ஆம் தேதி வங்கக் கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள, ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, துறைச் செயலர்கள், ஆட்சியர்கள், டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கண்காணித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறைகள் செயல்பட வேண்டுமென என அறிவுறுத்திய முதலமைச்சர், கொரோனாவை வென்றதைப் போல் பருவமழையையும், புயலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.

வரும் 9ஆம் தேதியன்று வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், ஆட்சியர்கள் ஆயத்த பணிகளையும், நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments