ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷை ஆட்டமிழக்கச் செய்த கிறிஸ் கெயில், அவரை கட்டியணைத்து வழியனுப்பிய வீடியோ காட்சி ரசிகர்களால் அதிகம் பகிர்வு...

0 4021

உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷை ஆட்டமிழக்கச் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில், அவரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்த வீடியோ காட்சிகளை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அபுதாபியில் நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது. போட்டியில் மிட்சல் மார்ஷ் 53 ரன்கள் எடுத்த நிலையில், கெயிலிடம் தனது விக்கெட்டை இழந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பெவிலியன் நோக்கி சென்ற மிட்செல் மார்ஷை கிறிஸ் கெயில் கட்டியணைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்த போட்டியுடன் கிறிஸ் கெயில் ஓய்வு பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர் விக்கெட் எடுத்து வித்தியாசமாக கொண்டாடிய காட்சியை கிரிக்கெட் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments