ஜெர்மனியில் ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் வெடி வைத்து தகர்ப்பு... 

0 2808

ஜெர்மனியில் ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த பாலம் ஒன்று வெடி வைத்து தகர்கப்பட்டது.

சல்ஸ்பச்டல் நகரில் தினமும் 90,000 வாகனங்கள் பயணித்த 1,000 அடி நீளப் பாலத்தின் roller bearing பழுதடைந்ததால் பாலத்தின் ஒரு பகுதி மணலில் புதைந்தது. பழுதடைந்த பாலத்தை தகர்த்து விட்டு அங்கு புதிய பாலத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகள் ஏதேனும் உள்ளனவா என சோதனையிடப்பட்டது. பின்னர் 220 கிலோ வெடிப்பொருட்கள் பொருத்தப்பட்டு நொடிப்பொழுதில் பாலம் தகர்க்கப்பட்டது.அங்கு குவிந்த 15,000 டன் கட்டுமானக் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments