தனியார் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு, ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வரும் - அரியானா அரசு

0 2445

அரியானாவில் தனியார் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஜனவரி 15 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறும் புதிய வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அரியானா சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவேற்றப்பட்டது.

இதற்குத் தொழில்துறையினரிடையே எதிர்ப்பு எழுந்த போதும், மார்ச் மாதத்தில் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இந்தச் சட்டம் வரும் ஜனவரி 15ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிட்டு அரியானா அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments