10, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0 5973

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்ஜெக்டிவ் தேர்வுமுறை குறித்தான பயிற்சியை அனைத்து பள்ளிகளும்  வழங்கவேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலினால் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வுகள் இருபருவங்களாக நடத்தப்படவுள்ளது.

அதன்படி, வரும் 16-ம் தேதி தொடங்கும் முதல்பருவத்தேர்வுகள் நவம்பர் 22 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று இத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஷன்யம் பரத்வாஜ் வெளியிட்டார்.

அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொத்தம் உள்ள 189 பாடங்களில், முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்றும், காலையில் 11:30க்கு தொடங்கும் தேர்வானது, மதியம் 1 மணி வரை 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, முதன்முறையாக ஒஎம்ஆர் தாளில் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதால் அதற்குண்டான பயிற்சியை பள்ளி நிர்வாகம் வழங்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments