பிரான்ஸில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மோன லிசா ஓவியத்தின் பிரதி ஏலம்...

0 2535

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மோன லிசா ஓவியத்தின் பிரதி, ஏலம் விடப்பட உள்ளது.

1503ம் ஆண்டு லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் பாரிஸில் உள்ள லூவார் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மோன லிசா ஓவியம் வரையப்பட்ட சில ஆண்டுகளிலேயே மேலும் சில ஓவியர்கள் அதை போலவே அச்சசலான பிரதிகளைத் தீட்டினர்.

அவ்வாறு தீட்டப்பட்ட பிரதி ஓவியம் ஒன்று கடந்த ஜூன் மாதம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. தற்போது பாரிஸில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றொரு பிரதி ஓவியம் ஏலம் விடப்பட உள்ளது. ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் வரை அது ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments