முழுமையடையாத பிளாட்டுகளை பெற்றுக்கொள்ள வற்புறுத்தக்கூடாது - கட்டுமான நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

0 2757

முழுவதும் கட்டி முடிக்கப்படாத, உள்ளூர் நகரமைப்பு அதிகாரிகளால் கம்ப்ளீஷன் சான்றிதழ் வழங்கப்படாத flat களை வாங்குமாறு அதை முன்பதிவு செய்தவர்களை வற்புறுத்தக்கூடாது என தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Mantri Technology Constellation Private Limited என்ற கட்டுமான நிறுவனம், சென்னையில் 2015 ல் வில்லா கட்டிமுடிக்க 2013 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தத்தின்படி முன்பதிவு செய்த தம்பதியர், வில்லாவின் விலையான சுமார் மூன்றரை கோடி ரூபாயை முழுவதுமாக செலுத்தினர். ஆனால் வில்லாவை ஒப்படைப்பதில் 2 ஆண்டுகள் காலதாமதமானது.

அப்போதும் வில்லா வசிப்பதற்கு தகுதியான நிலையில் இல்லை என்றும், ஆனால் possession எடுக்க வேண்டுமானால், வில்லா முழுமையான நிலையில் உள்ளது என கையெழுத்திடுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறி புகார் அளித்தனர். இதை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் வாடிக்கையாளர் செலுத்திய முழு தொகையையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments