மிரட்டி பணம் பறித்ததாக கைதான முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

0 1609

பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரை கடந்த திங்கள் கிழமை கைது செய்தனர். டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ்ஐ சச்சின் வாசேயிடம், ஹோட்டல் மற்றும் பார் உரிமையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் 100 கோடி ரூபாய் மிரட்டி வசூலிக்க அனில் தேஷ்முக் உத்தரவிட்டார் என்ற மும்பை முன்னாள் காவல் ஆணையாளர் பரம் பீர் சிங் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அனில் தேஷ்முக் மீது சிபிஐ FIR பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில், மும்பை ஆர்கெஸ்ட்ரா பார் உரிமையாளர்களிடம் இருந்து சச்சின் வாஸ் நான்கு கோடியே 70 லட்சம் ரூபாய் வசூலித்து தேஷ்முக்கின் உதவியாளரிடம் கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பணம் நாக்பூரில் உள்ள சிலருக்கு ஹவாலா பணமாக மாற்றப்பட்டதாகவும், பின்னர் அனில் தேஷ்முக்கின் மகன் ரிஷிகேஷின் உத்தரவின்படி அது டெல்லியில் போலி நிறுவனங்களை நடத்தும் ஜெயின் சகோதரர்களுக்கு சென்று அதன் பிறகு தேஷ்முக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அறக்கட்டளைக்கு போனதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments