மேற்கு ஆப்பிரிக்காவில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியிலிருந்து சிதறிய எரிபொருளை மக்கள் சேகரித்தபோது லாரி வெடித்துச் சிதறியதில் 92 பேர் உயிரிழப்பு...

0 2480

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் எரிபொருள் லாரி வெடித்துச் சிதறியதில் 92 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் தலைநகரான ஃப்ரீடவுன் நகரில் வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளான போது, அதில் இருந்து எரிபொருள் வெளியேறி உள்ளது.  அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் கூட்டமாக சென்று எரிபொருளை சேகரிக்க முயன்றபோது லாரி வெடித்துச் சிதறியது.

மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில் நிகழ்ந்த விபத்தில் எரிபொருள் எடுக்க சென்றவர்கள், அருகில் வாகனங்களில் இருந்தவர்கள், சாலையோரம் நடந்து சென்றவர்கள் என பலரும் தீக்கிறையாகினர். இந்த சம்பவத்தில் மக்கள் நிரம்பியிருந்த பேருந்து ஒன்றும் முழுவதும் எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொடூர விபத்தில் 92க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments