பணிக்கு சேர்ந்த இரு நாட்களில் கல்லாவில் கைவரிசையை காட்டிய ஊழியர்

0 12657

தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணிக்கு சேர்ந்த இரண்டே நாளில் கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை ஊழியர் ஒருவர் திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரூரில் பாலமுருகன் என்பவர் நடத்திவரும் உணவகத்தில் வாணியம்பாடியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பணிக்கு சேர்ந்துள்ளார். பணிமுடிந்து ஊழியர்கள் உணவகத்திலே தங்கவைக்கப்படும் வழக்கம் இருப்பதால், தீபாவளிக்கு முந்தைய நாள் இரவில் உணவகத்தில் தங்கியிருந்த ரிஸ்வான் கல்லாப்பெட்டியில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

அடுத்தநாள் காலையில் உணவகத்தை திறந்தபோது, கல்லாப்பெட்டி துடைத்து வைக்கப்பட்டதுபோல இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஊழியரான ரிஸ்வான் திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments