காரைக்குடி நகரப்பகுதியில் உள்ள சாலையின் நடுவே உள்ள டிவைடரில் அடுத்தடுத்து இருகார்கள் மோதி விபத்து

0 2406

காரைக்குடி நகரப்பகுதில் உள்ள சாலையை பிரிக்கும் டிவைடரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பெரியார் சிலை அருகே, புதியபேருந்து நிலையம் செல்லும் 100அடி சாலையின் நடுவே டிவைடர் அமைந்துள்ளது.

இந்த டிவைடர் எச்சரிக்கை விளக்குகள், பலகைகள் ஏதுமில்லாத காரணத்தால் வாகனஒட்டிகளின் பார்வைக்கு புலப்படாமல் விபத்துகளுக்கு காரணமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. நேற்று இரவும் இதே டிவைடரில் மோதிய இருகார்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இதன்காரணமாக அப்பகுதிமக்கள் டிவைடரை அகற்றவேண்டும் அல்லது எச்சரிக்கை விளக்கு அமைக்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments