குடிபோதையில் சாலை நடுவே பட்டாசு வெடித்து அட்டகாசம் செய்த இளைஞர்கள், தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

0 1722

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் சாலை நடுவே நின்று பட்டாசு வெடித்ததை கண்டித்ததற்காக போதையில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கி, அவர் மீது பட்டாசு கொளுத்தி வீசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி அன்று இரவு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் சாலையின் நடுவே நின்று பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டும் அட்டகாசம் செய்துள்ளனர். அவ்வழியாகச் சென்ற அரகண்டநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் டார்ஜான், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, வேறு இடம் சென்று பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இளைஞர்களில் ஒருவன், உதவி ஆய்வாளரை தகாத வார்த்தையில் பேசினான் என்று கூறப்படுகிறது. எஸ்.ஐ. டார்ஜான் அவனை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக நண்பர்கள் பட்டாசுகளைக் கொளுத்தி உதவி ஆய்வாளர் மீது வீசியுள்ளனர்.

இதனையடுத்து மேலும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு, ஆகாஷ், விக்னேஷ், சோமு, ஷானவாஸ் என 4பேர் கைது செய்யப்பனர். ஹரிதாஸ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments