திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கோயில் நிர்வாகம்

0 1715

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வரும் 9ஆம் தேதி அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 9ஆம் தேதி அன்று பிற்பகல் 12.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பின் கோயில் வளாகத்தில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்விற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments