பயிர் காப்பீடு வழங்கியதில் ரூ.12 லட்சம் முறைகேடு உறுதியானதால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பணியிடை நீக்கம்

0 1850

திருவாரூர் மாவட்டத்தில் முறைகேடு புகாரில் சிக்கிய தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

தப்பளாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவரான ரவிச்சந்திரன், கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு பயிர்கடன் மற்றும் பயிர்காப்பீடு வழங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

அதையொட்டி, மாவட்ட கூட்டுறவு இணைபதிவாளர் அமைத்த குழு நடத்திய விசாரணையில், 12 லட்சம் ரூபாய் முறைகேடு செய்தது உறுதியானதால் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணைபதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments