தூத்துக்குடியில் ரயில்வே சுரங்கப்பாலத்தில் குளம் போல் தேங்கிய மழை நீரால் விவசாய நிலங்களுக்கு தண்ணீரில் நீச்சல் அடித்து செல்லும் விவசாயிகள்...

0 2014

தூத்துக்குடி மாவட்டம் மேலப்பாறைப்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாலத்தில் மழை நீர் புகுந்து குளம் போல தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலப்பாறைப்பட்டி மற்றும் கீழப்பாறைப்பட்டிக்கு இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தில் 21அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் வெளி இடங்களுக்குச் செல்ல முடியாமல், சுரங்கப்பாலத்தின்சுவரில் ஆபத்தான நிலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாய நிலங்களுக்கு செல்லககூடியவர்கள் தண்ணீரில் நீச்சல் அடித்து செல்கின்றனர். ரயில்வே நிர்வாகத்தினர் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட போதும் தண்ணீர் பெரிய அளவில் குறையவில்லை. மழைக்காலங்களில் எவ்வித பாதிப்பு இல்லாமல் இருக்க மாற்று பாதை ஏற்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments