வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு... ஊராட்சிமன்றத் தலைவருக்கு கத்திக்குத்து

0 2071

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே, முன்விரோதம் காரணமாக ஊராட்சிமன்றத் தலைவரை சராமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பித்தளைப்பட்டி ஊராட்சித் தலைவரான மயில்சாமியிடம் அவ்வூரைச்சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டிற்கு பிரத்யேக குடிநீர் இணைப்பு வழங்கக்கோரியதாகவும், இணைப்பு வழங்க தொடர்ந்து இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மயில்சாமி இன்று காலையில் தோட்டத்திற்கு சென்றிருந்தபோது கை மற்றும் முதுகு பகுதியில் முருகன் கத்தியால் பலமாக குத்தியுள்ளார். மயில்சாமி வலி தாளாமல் கூச்சலிட்டதில், அங்கிருந்தவர்கள் முருகனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததோடு, ரத்தவெள்ளத்தில் மிதந்த ஊராட்சி தலைவரான மயில்சாமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments