காஞ்சிபுரத்தில் ஏற்கனவே அடகுவைத்த நகைகளை மீண்டும் அடகு வைத்தது போல் காண்பித்து பண மோசடி செய்த தனியார் நகைக்கடன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது...

0 1905

காஞ்சிபுரத்தில் வாடிக்கையாளர்கள் பெயரில் ஏற்கனவே உள்ள நகைகளை எடுத்து, மீண்டும் அடகு வைத்து கடன் வழங்கியது போல் போலியாக கணக்கு காட்டி பண மோசடி செய்ததாக தனியார் நகைக்கடன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்பி எப் சி என்ற அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நகைக்கடன்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அதிகாரிகள் தணிக்கை செய்வது வழக்கம்.

சில தினங்களுக்கு முன் வழக்கமான தணிக்கையின்போது, வாடிக்கையாளர்கள் பெயரில் ஏற்கனவே உள்ள நகைகளை எடுத்து, மீண்டும் நகைகளை அடகு வைத்து  கடன் வழங்கியது போல் போலியாக கணக்கு காட்டி பண மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

77 லட்ச ரூபாய் வரை நடைபெற்றுள்ள இந்த மோசடி தொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகேயன் என்பவரையும் விற்பனைப் பிரிவு மேலாளர் விஷ்ணு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments