6 மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு..! வடகிழக்கு பருவமழை தீவிரம்.!

0 27659

தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கும், சேலம், திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை, நீலகிரி, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சிலப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் அது வலுப்பெற்று வட தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 9ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளிலும், வரும் 12-ஆம் தேதி வரை வங்கக் கடல் பகுதிகளிலும் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments