காவல் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்ததில், காவல் நிலைய கட்டிடம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

0 1707

சென்னை பாண்டி பஜார் காவல் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு சாய்ந்ததில், காவல் நிலைய கட்டிடம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்த நிலையில், அதிகாலையில் பலத்த காற்று வீசியதால் பாண்டி பஜார் காவல் நிலைய வளாகத்தில் இருந்த 100 வருட பழமையான தூங்குமூஞ்சி மரம் வேரோடு சாய்ந்தது.

இதனால் குற்றத்தடுப்பு பிரிவு அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி, சட்டம் ஒழுங்கு பிரிவு கட்டட மேற்கூரை மற்றும் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments