முகேஷ் அம்பானி குடும்பத்தினர் லண்டனில் குடியேறும் திட்டமா? ரிலையன்ஸ் விளக்கம்

0 4156

முகேஷ் அம்பானியின் குடும்பம் லண்டனில் குடியேற உள்ளதாக நாளிதழில் வந்த செய்திக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் லண்டன் ஸ்டோக் பார்க்கில் உள்ள 300 ஏக்கர் பரப்புள்ள தோட்டம் மற்றும் பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளது. இந்நிலையில் அம்பானி குடும்பம் மும்பையில் இருந்து இடம்பெயர்ந்து லண்டன் ஸ்டோக்பார்க்கில் உள்ள பங்களாவில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது.

இந்தச் செய்திக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி, தேவையற்ற, அடிப்படையற்ற ஊகங்களுக்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. குடியிருப்பை மாற்றவோ அல்லது லண்டனில் குடியிருக்கவோ அல்லது உலகில் வேறெங்கும் குடிபெயரவோ எந்தத் திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments