மதுபோதையில் பக்கத்து வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்து ரகளை; முன்னாள் அதிமுக எம்.பி., மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

0 2389

நீலகிரியில், மதுபோதையில் பக்கத்து வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்து ரகளையில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி., மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குன்னூர் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் வசித்து வரும் கோபால கிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நீலகிரி எம்.பி.யாக இருந்தவர்.

இந்நிலையில், தீபாவளி அன்று, கோபால கிருஷ்ணன் அவரது பக்கத்து வீட்டுக்குள் ஆடையின்றி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், அவரை தாக்கியதுடன் சாட்சிக்காக வீடியோ பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த கோபால கிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது ஆபாசமாக நிற்பது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments