ஓடும் பேருந்தின் கூரையின் மீது ஏறி சாகசம்.. கூரையிலிருந்து தவறிவிழுந்தும் காயமுறாமல் எழுந்து சென்ற காட்சி வைரல்

0 6226

மதுரை மேலூரில் ஓடும் பேருந்தின் கூரையின் மீது சாகசவீரரைப்போல் நடந்துவந்த மர்மநபர் கூரையிலிருந்து தவறிவிழுந்தும் காயமேதுமின்றி தப்பித்துசெல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

மேலூர் செக்கடி பகுதியில் சிங்கம்புணரியில் இருந்து வந்த அரசு பேருந்தின் மேற்கூரையில் திடீரென ஏறிய மர்ம ஆசாமி, சாகசவீரரை போன்றதொரு பாவனையில் நடந்து சென்றார். அவ்வழியே சென்றவர்கள் பார்த்து சத்தமிட்டு கூறியவுடன், ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதில் மேற்கூரையில் இருந்து முன்பக்கமாக கீழே விழுந்த அந்த நபர், காயமேதுமின்றி பதற்றமடையாமல் கெத்தாக எழுந்து சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், சாகசம் புரிந்த அந்நபர் சென்னகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதும் மனபிறழ்வு கொண்டவர் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments