கத்தி அரிவாளுடன் பெண்களை மிரட்டிய போதை ரவுடிகள்..! செல்போன் காமிராவில் சிக்கினர்..!

0 4422
கத்தி அரிவாளுடன் பெண்களை மிரட்டிய போதை ரவுடிகள்..! செல்போன் காமிராவில் சிக்கினர்..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குத்தபாஞ்சான் குளம் கிராமத்தில் அரிவாள், கத்தியுடன் புகுந்த போதை ரவுடிகள் அங்கிருந்த பெண்ணை மிரட்டி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குத்த பாஞ்சான் கிராமத்தில் குடிபோதையில் கையில் அரிவாள் மற்றும் கத்தியை எடுத்து வந்து இருவர் அங்குள்ளவர்களிடம் வம்பு செய்ததாக கூறப்படுகின்றது.

கையில் ஆயுதங்களை வைத்து மிரட்டியவர்களை வீடியோ எடுத்த பெண்ணின் உறவினர்கள் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஆத்திரம் அடைந்த போதைரவுடிகள் இருவரும் வீடியோ எடுத்தவர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு , தாக்குதல் நடத்திய இருவரையும் விரட்டியதால் இருவரும் தப்பி ஓடியதாக கூறப்படுகின்றது

இந்த சம்பவத்தால் அங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதோடு பாதுகாப்புக்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments