கொரோனா இறப்பை 89 சதவீதம் வரை தடுக்கும் பைசர் நிறுவன மாத்திரை.?

0 2307

கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின்  ஆண்டிவைரல்  மாத்திரையின் பரிசோதனை முடிவுகள், பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்நுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் கொண்டதாக தரவுகள் காட்டுகின்றன. எனினும்,  முழுமையான பரிசோதனை முடிவுகளின் தரவுகளை இரு நிறுவனங்களுமே வெளியிடவில்லை.

அதேவேளையில், பைசர் நிறுவனம் தங்களின் கொரோனா எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments