சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தீப்பிடித்த கார் ; உடனடியாக காரை விட்டு இறங்கி உயிர் பிழைத்த குடும்பத்தினர்

0 2115
சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தீப்பிடித்த கார்

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், காரில் வந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.

காரமடையைச் சேர்ந்த நசீர் என்பவர் தனது ஃபியட் பேலியோ காரில் கிணத்துக்கடவு நோக்கி, குடும்பத்தினர் 4 பேருடன் சென்று கொண்டிருந்தார்.

ஈச்சனாரி அருகே வந்தபோது, காரின் முன்பக்கம் இருந்து புகை வந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் புகை அதிகமாகி தீப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், 5 பேரும் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கியுள்ளனர்.

அதன் பின்னர் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காரிலிருந்த பேட்டரியில் இருந்து மின் கசிவு காரணமாகவே தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments