சென்னையில் தற்போது வரை 138 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

0 2555
சென்னையில் தற்போது வரை 138 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னையில் அதிகாலையிலிருந்து தற்போது வரை 138 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளியன்று உருவாகும் பட்டாசு குப்பைகளை 24 மணி நேரத்திற்குள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுருந்தார். இதையடுத்து அதிகாலை முதலே தொடங்கிய தூய்மைப்பணியில் தற்போது வரை 138 டன் பட்டாசு கழிவுகள் சென்னை வீதிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

எஞ்சியிருக்கும் பட்டாசு குப்பைகளை இரவு நேரங்களில் அகற்றுவதற்காக 2192 பணியாளர்களோடு, ஐந்நூறுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணி வாகனங்கள் ஈடுபட உள்ளன. அகற்றப்பட்ட பட்டாசு கழிவுகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள அபாயகரமான கழிவுகள் மேலாண்மை மையத்தில் பாதுகாப்பான முறையில் அகற்றப்படவுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments