நாட்டு பட்டாசு வெடித்து தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் ; புதுச்சேரி கிராமப்பகுதிகளில் நாட்டு பட்டாசு கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு

0 2226
புதுச்சேரி கிராமப்பகுதிகளில் நாட்டு பட்டாசு கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு

இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு பட்டாசு வெடித்ததில், தந்தை மகன் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி கிராமப்பகுதிகளில் உள்ள நாட்டு பட்டாசு கடைகளில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு பகுதியை சேர்ந்த கலைநேசன் உறவினர்களுக்கு கொடுப்பதற்காக நாட்டு பட்டாசுகளை இருசக்கர வாகனத்தின் முன்பு வைத்து அதன் மீது தனது 7 வயது மகனை அமரவைத்து கூட்டிச்சென்ற போது உராய்வு ஏற்பட்டு பட்டாசு வெடித்து சிதறியது.

இதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், கரிக்கலாம்பாக்கம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாட்டு பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போலீசார், வெடிகளில் அளவுக்கு அதிகமான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments