சீனாவில் கொரோனா பரவல் தொடர்பாக செய்தி சேகரித்த செய்தியாளர் மரணப் படுக்கையில் உள்ளதாக தகவல்

0 3407
கொரோனா குறித்து செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு சிறை தண்டனை

வூஹான் நகரில் கொரோனா பரவல் தொடர்பாக சீன அரசு எடுத்த நடவடிக்கை பற்றி செய்தி சேகரித்த செய்தியாளர் மரணப் படுக்கையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், கொரோனா தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சாங் சான் என்பவர், தொற்றை கையாள்வது தொடர்பாக அரசுக்கு கேள்வியெழுப்பி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதனை அடுத்து மே மாதம் கைதான அவருக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சாங்க் சானின் உடல் எடை மிகவும் குறைந்ததாகவும், அவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வது கடினம் எனவும், அவரது சகோதரர் சாங் ஜூ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், சாங் சான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு மூக்கின் வழியே உணவு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, சாங் சானை விடுதலை செய்யக்கோரி மனித உரிமை அமைப்புகள் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments