2 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் ; 2 பேர் உயிரிழப்பு

0 1763
2 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே மோதல் ; 2 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் கடற்கரை அருகே 2 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் கேங்கன்  நகருக்கு அருகே உள்ள பஹியா பெடெம்பிக் கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் நடைபெற்ற மோதலின்போது இருதரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, தங்கும் விடுதி ஒன்றில் இருந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் அங்கேயே ஒளிந்து கொண்டனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் அந்த கும்பல்களை சேர்ந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments