குடிபோதையில் மாநகரப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்த 3 இளைஞர்கள் கைது

0 2627
குடிபோதையில் மாநகரப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்த 3 இளைஞர்கள் கைது

சென்னை ஆவடியில் குடிபோதையில் மாநகரப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கி 47 d அரசு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சி.டி.எச் சாலை அருகே திடீரென பேருந்தை வழிமறித்த 3 இளைஞர்கள், குடிபோதையில் கையில் வைத்திருந்த இரும்புக் குழாயைக் கொண்டு பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

பேருந்தில் இருந்த ஒன்றிரண்டு பயணிகளும் அச்சத்தில் இறங்கிவிட்டனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து, பிரகாஷ், பார்த்திபன், ஜீசஸ் என 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments