மாமல்லபுரத்தில் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் ; சென்னை உயர்நீதிமன்றம்

0 3005
மாமல்லபுரத்தில் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம்

மாமல்லபுரத்தில் பொது பயன்பாட்டுக்காக 47 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள அந்த 5.29 ஹெக்டேர் நிலத்தை கடலுக்கடியில் அருங்காட்சியகம் அமைக்க, கடந்த 1974ம் ஆண்டு தமிழக அரசு கையகப்படுத்தியது.

பல ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல்படுத்தாததால் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்து, நிலத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரி உரிமையாளர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிபதி இளந்திரையன் முன் வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி விட்டதாலும், நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதாலும் அதில் தலையிட முடியாது என தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. அந்த வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments