தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு ; அமைச்சர் மா.சுப்பிரமணியம்

0 2711
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு

தொடர் விடுமுறை மற்றும் மழைக் காரணமாக சனிக்கிழமை நடைபெற இருந்த எட்டாவது மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் நிலைய மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி முகாமில் பணியாற்றும் களப்பணியாளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து முகாம் ஒத்திவைக்கபடுவதாக குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments